பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிவந்த குருபகவான், 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரம் தொழிலில் எதிர்ப்பையும், உடலில் நோய் நொடிகளையும் உண்டாக்குவார் என்றாலும், அவருடைய பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் விருத்தியாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும் என்றாலும், ஞான மோட்சக்காரகன் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டிருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். நவ் 30 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களின் இயல்பான நிலை மாறும். எந்த ஒன்றையும் உடனுக்குடன் செய்து முடிக்கும் உங்களிடம் ஒரு மந்தமான நிலை உண்டாகும் அதனால் எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். உடல் நிலையிலும் ஏதேனும் ஒரு சங்கடம் உண்டாகி உங்களை சோர்வடைய வைக்கும் என்பதால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் யோசித்து முடிவு எடுப்பதும் இந்த நேரத்தில் அவசியம். பிறரை நம்பி எந்தவொரு வேலையையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். அதனால் சங்கடங்களே அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் கூடும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 5.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 30. டிச. 3, 12.
பரிகாரம்: காந்திமதி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். லாப ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நவ. 30 வரை உங்கள் சப்தமாதிபதி புதன் அஸ்டம ஸ்தானத்தில் மறைவதால், மறைந்த புதன் நிறைந்த செல்வங்களைத் தருவார் என்ற வார்த்தைக்கேற்ப பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் இருக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வீடு இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும் என்றாலும், நவ. 30 முதல் ஜென்ம சனி வக்கிர நிவர்த்தி அடைவதும், புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்கள் செயல்களில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தும். ஞாபக மறதியின் காரணமாக முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். பெரியோரின் ஆதரவும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை சிலருக்கு உண்டாகும். விவசாயிகளுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: டிச. 5, 6.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 26, 30. டிச. 3, 8, 12.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
ரேவதி
நேரம் காலம் அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதமாகும். மாதத்தின் முற்பகுதியில் வித்யா காரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதுடன், உங்கள் தன குடும்பாதிபதியும், பாக்கியாதிபதியுமான செவ்வாய் ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் உங்கள் திறமைக்கேற்ற, முதலீட்டிற்கேற்ற ஆதாயத்தை காண முடியும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் உயரும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் வேலைகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுமதி கிடைக்கும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் சங்கடங்கள் எல்லாம் விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: டிச. 6, 7.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, 30. டிச. 3, 5, 12, 14.
பரிகாரம்: காந்திமதி அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.
பகிர்கcopied
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »