எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சனி, ராகு செயல்படுகின்றனர். ஏழாம் இடத்தில் உள்ள முக்கூட்டு கிரகங்கள் சில எதிர்மறை பலன் தரும் நிலையில் உள்ளனர். கடந்த மாதங்களில் எளிதாக நிறைவேற்றிய பணிகளில் இப்போது கூடுதல் முயற்சியுடன் செயல்பட வேண்டி இருக்கும். தம்பி, தங்கை உதவிகரமாக நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை திருப்திகர மனதுடன் பயன்படுத்திக் கொள்வீர்கள். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் அணுகுவர். பணவசதிக்கேற்ப அவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூர்வசொத்தைப் பராமரிப்பதில் அதிக பணச்செலவு ஏற்படும். எதிர்மனப்பாங்கு உள்ளவர்களிடம் இருந்து விலகுவதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். உடல்நலம் சீர்பெற தகுந்த மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது. தம்பதியர் சிறிதளவில் உருவாகிற கருத்து பேதங்களை பெரிதுபடுத்தி பேசுவர். குடும்ப ஒற்றுமை பலம்பெற சகிப்புத்தன்மை, சாந்தகுணம் பின்பற்றுவது அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தியின் தரத்தையும், அளவையும் உயர்த்த சிரமப்படுவர். தொழில் வகையில் நேரடி கண்காணிப்பு நல்லது. அபிவிருத்தி கடன் பெறுவதில் நிதான அணுகுமுறை நலம்பெற உதவும். வியாபாரிகள் சுமாரான லாபம் அடைவர். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் மூலதன தேவைக்கு கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். பணியாளர்கள் தகுந்த கவனமுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத நல்லநிலை இருக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி சார்ந்த உறவினர்களின் கடந்தகால செயல்முறை பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பதால் குடும்பநலம் சீராக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமையும், சலுகையும் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக முயற்சியால் உற்பத்தி, விற்பனையின் அளவை பாதுகாத்திடுவர். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் சுமூக உறவு கொள்வதால் மட்டுமே திட்டங்கள் சீராக நிறைவேறும். விவசாயிகளுக்கு மகசூல், கால்நடை வளர்ப்பில் அளவான பணவரவு உண்டு. மாணவர்கள் வெளி பழக்கம் தவிர்த்து, படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். முருகனை வழிபடுவதால் எதிரிகளின் தொல்லை விலகும்.
உஷார் நள்: 13.2.13 காலை 6.01 முதல் 15.2.13 காலை 6.38 வரை மற்றும் 12.3.13 காலை 6.33 முதல் 13.3.13 முழுவதும் வெற்றி நாள்: மார்ச் 1, 2, 3 நிறம்: மஞ்சள், ரோஸ் எண்: 3, 9
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »