உறவினர்களிடம் அதிக பாசமுள்ள கன்னிராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு நற்பலன் வழங்குகிற கிரகங்களாக சூரியன், புதன், குரு செயல்படுகின்றனர். சிந்தனையில் தெளிவும், செயல்பாடுகளில் புத்துணர்வும் பிறக்கும். எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற ஆர்வமுடன் பணிபுரிவீர்கள். இளைய சகோதர வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். வீடு, வாகன வகையில் மாற்றங்களைச் செய்து கொள்வீர்கள். புத்திரர்கள் தேவையற்ற விஷயங்களைப் பேசி கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களுக்கு பொறுமையாக அறிவுரை சொல்வது நல்லது. எதிரிகள் விலகிப்போகிற நன்னிலை உண்டு. நீண்டநாள் தொந்தரவு தந்த கடனைச் செலுத்தி நிம்மதி பெறுவீர்கள். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன், மனைவி கருத்து ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதால் குடும்ப வாழ்வுமுறை சிறப்பாக அமையும். நண்பர்களிடம் உதவி கேட்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் நிதான அணுகுமுறை நல்லது. தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவர். ஒப்பந்தங்கள் கிடைப்பதில் அதிர்ஷ்டகரமான சூழ்நிலை உண்டு. லாபம் ஓரளவுக்கு இருக்கும், வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணித்திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்திடம் பாராட்டு, வெகுமதி பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் நன்மதிப்பைப் பெற பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வர். தாய்வீட்டு சீர்முறை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்றி பதவி உயர்வு, பிற சலுகைகள் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளை திறம்பட நிறைவேற்றி உற்பத்தியில் முன்னேற்றம் அடைவர். புதிய ஆர்டர் கிடைத்து தாராள பணவரவை பெற்றுத் தரும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க யோகம் உண்டு. விவசாயிகளுக்கு பயிர் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் படித்து தரத்தேர்ச்சி பெறுவர்.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை வளரும். உஷார் நாள்: 15.2.13 காலை 6.39 முதல் 17.2.13 மாலை 4.59 வரை வெற்றி நாள்: மார்ச் 3, 4, 5 நிறம்: வாடாமல்லி, பச்சை எண்: 4, 5
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »