Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரி அன்னை! ஊர்மிளை (லட்சுமணன் மனைவி ஊர்மிளா) ஊர்மிளை (லட்சுமணன் மனைவி ஊர்மிளா)
முதல் பக்கம் » பிரபலங்கள்
மார்க்கண்டேயன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2013
05:03

கடகம் என்னும் ஊரிலே மிருகண்டு என்னும் தவச்சீலர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி மருத்துவதி, கோடிச் செல்வம் இருந்தாலும் ஓடிவந்து விளையாடும் ஒரு பிள்ளைக்கு ஈடாகுமா? மங்கல மென்னும் மனைமாட்சியின் நன்கலமே மக்கடபேறல்லவா? மிருகண்டு-மருந்துவதி தம்பதியர்க்கும் வெகுகாலம் மழலை பாக்கியம் கிடைக்கவில்லை ஆகவே, காசிக்கு சென்று கங்கையில் நீராடி ஈசனை வழிபட்டு தவம் மேற்கொண்டனர். அவர்களது தவத்தின் பயனாக சிவபெருமான் அவர்களுக்கு காட்சியளித்து என்ன வரம் வேண்டும்? என்று வினவினார். இருவரும், தங்களுக்கு புத்திரபாக்கியம் வேண்டும் என்று கேட்டனர். உடனே முக்கண்ணன் அவர்களைப் பார்த்து குற்றம் குறைகளுடன் அறிவில்லாத மூடனாக நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அறிவில் ஆதவனாக, குறையொன்றுமில்லாத அற்ப ஆயுள் கொண்ட-பதினாறு வயதே வாழக்கூடிய புத்திரன் வேண்டுமா? என்று ஈசன் கேட்க, சொற்ப ஆயுள் உடையவனரனாலும், புத்திசாலி மகனே வேண்டும் என்று கேட்டனர் இருவரும். வரத்தைத் தந்தான் பரமன்.

சிறிதுகாலம் கழித்து மருத்துவதிக்கு அழகான ஆண்மகவு பிறந்தது. மிருகண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார். ஏராளமான தானதர்மங்களைச் செய்தார். நான்முகன் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டார். குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பியதும், பெற்றோர்கள் உபநயனம் செய்து வைத்தார்கள். சகல வித்தைகளிலும் தேர்ச்சிபெற்ற மார்க்கண்டேயன், ஈசனிடம் மாளாக் காதல் கொண்டு, அவரை நாள் தவறாமல் வணங்கி பக்தி செய்தான். பதினாறே ஆண்டுகள்தான் தனக்கு ஆயுள் என்பதை அறிந்த மார்க்கண்டேயன் மனம் கலங்காமல், மணிகர்ணிகை ஆலயத்துக்குச் சென்று ஈசனை வணங்கி ஆலயத்தின் தென்பகுதியில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் தினமும் பூஜித்து வந்தான். நாட்கள் நகர்ந்தன. மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது பூர்த்தியாகும் நாளும் வந்தது. அவன் உயிரைக் கவர்ந்துசெல்ல யமதூதர்கள் வந்தார்கள். அவன் சிவ பூஜையிலிருப்பது கண்டு அவனை நெருங்க பயந்து திரும்பிச் சென்றனர். கோபம் கொண்ட யமன். தனது அமைச்சனாகிய காலனை அனுப்பினான். தன்னுடன் புறப்பட்டு வரச்சொன்ன காலனைப் பார்த்து, தான் ஈசனின் தொண்டனென்றும் அவருடனன்றி வேறு எவருடனும் எங்கேயும் வரமாட்டேன் என்றும் உறுதியாகச் சொன்னான். மார்க்கண்டேயன் இதையறிந்து.

கண்களில் கோபம் கொப்பளிக்க, கையில் பாசமும், சூலமும், தண்டமும் தாங்கி எருமை வாகனத்திலமர்ந்து, வீரர்கள் புடைசூழ, சிறுவன் உயிர்பறித்து வர புறப்பட்டான் யமன். முதலில் யமனைப் பார்த்து பயந்தாலும், இறைவனின் திருவருள் தந்த தைரியத்தினால், ஈசனுடைய அடியார்கள் யமலோகத்துக்குச் செல்லாமல் நேராகக் கைலாயத்தையே அடைவார்கள் என கூற்றுவனிடம் கூறுகிறான் மார்க்கண்டேயன். இடியென கர்ஜித்த தர்மராஜன். பாசக்கயிற்றை வீசி இழுக்க, அந்தக் கயிறு, லிங்கத்தைக் கட்டிப்படித்து சங்கரா சம்போ என்று கதறித்துடித்த மார்க்கண்டேயன் மேல் மட்டுமின்றி லிங்கத்தின் மீதும் விழுந்தது. ஈசன் பொங்கியெழுந்தார், பிளந்தது லிங்கம். வெளிப்பட்டார் ரிஷபவாகனர். இடது காலால் யமனை உதைத்துக்கொன்றார். உண்மையான அன்போடு பூஜித்த மார்க்கண்டேயனுக்கு, என்றும் பதினாறு என்ற சிரஞ்சீவித்துவம் அருளினார். ஒரு பக்தனைக் காக்க பிளவு பட்டது சிவலிங்கம்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar