விழுப்புரம்:கண்டமானடி அபிராமேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது.விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் உள்ள முத்தாம்பிகை உடனமர் அபிராமேஸ்வரர் கோவிலில், மகா சிவாராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை துவங்கியது.இரவு 7 மணி முதல் 8 மணி வரை குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண் கள் பங்கேற்று, சிவ பூஜை வழிபாடுகள் செய்தனர்.இரவு 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கி, 108 சங்கு அபிஷேகமும், லிங்கோத்பவர் பூஜையும் நடந்தது. முத்தாம்பிகை அம்மன், அபிராமேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இதன் பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை மற்றும் நான்காம் கால பூஜையும் நடந்தது.