பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி அமாவாசை அன்று, சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, ஐந்தாம் ஆண்டு சிறப்பு பூஜை, நேற்று நடந்தது.உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகவும், குழந்தை பேறு பெறவும், காலை, 10 மணிக்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மா, மாதுளை, கொய்யா, பலா, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட், பீட்ரூட், மிளகாய், வெண்டை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கை, முள்ளங்கி, பூசணி உள்பட, 1,000 கிலோ காய், கனி வகைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.