கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயிலில், பங்குனி பிரமோத்ஸவ விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று காலை கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 22ல் இரட்டை கருட சேவை, 24ல் திருக்கல்யாணம், 27ல் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 28ல் சேதுக்கரையில் தீர்த்தவாரி வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.