பதிவு செய்த நாள்
20
மார்
2013
10:03
பழநி: பழநி கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் 21 நாட்களில், ரூபாய் ஒரு கோடியே 15 லட்சம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் திறந்து, எண்ணப்பட்டன. ரொக்கமாக ஒரு கோடியே 15 லட்சத்து 45 ஆயிரத்து 834 ரூபாய் கிடைத்தது. தங்கம் 602 கிராம், வெள்ளி 7 ஆயிரத்து 403 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. தங்கத்தால் ஆன வேல், செயின், வளையல், முருகனின் உருவம் பொறிக்கப்பட்ட தகடு, மோதிரம், நாணயம், திருமாங்கல்யம், ஆள்ரூபம், வெள்ளியால் ஆன காவடி, வேல், பாதம், கொலுசு, வீடு, குண்டு போன்றவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் ராஜமாணிக்கம் உடனிருந்தனர்.