Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-13 நளதமயந்தி பகுதி-15 நளதமயந்தி பகுதி-15
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-14
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 பிப்
2011
04:02

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரதுமுதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். புதுமணத்தம்பதிகளைசிவபார்வதி கைலாயத்துக்கு விருந்துக்கு அழைத்தனர். பெருமாள் புறப்பட்டு விட்டார். பூமாதேவி வர மறுத்துவிட்டாள். அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் அசலா (இருந்த இடத்தை விட்டு நகராதவள்) என்பதை தாங்கள் அறிவீர்களா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். மக்கள் என்னாவார்கள்? என் பிள்ளைகளை நானே அழிப்பேனா? மேலும், நீங்கள் ஓரிடத்தில் இருக்கமாட்டீர்கள். திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள், என்றாள். பெருமாளுக்கு வருத்தம். கட்டிய மனைவியோடு, வெளியில் போய்க் கூட வரமுடிய வில்லையே என்று. மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ஆத்துக்காரி வரலையா? என்று கேட்டார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார். அவளோ ஓரிடத்தில் இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், அவள் எங்காவது போயிருக்கிறாள் என்றே பதில் கிடைக்கும். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடி ஓடி, அவளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.

பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான், என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், சுவாமி! எனக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன், என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்று விட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், பகவானாக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். நளமகாராஜாவுக்கும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றல்லவா விதி இருக்கிறது! அதை மாற்ற யாரால் இயலும்? புட்கரனும் அவனும் ஓரிடத்தில் அமர்ந்தனர். தம்பி நளனே! உன் தேசத்தில் மாடுகளைக் கூட உழவர்கள் கூட கரும்புகள் கொண்டு மேய்க்கின்றனர். உன் தேசத்து கடலில் பிரகாசமான முத்துக்கள் நிரம்பக் கிடைக்கின்றன. இத்தகைய செல்வவளம் மிக்க நீ, மிகப்பெரிய பொருள் ஒன்றைத் தான் பந்தயப் பொருளாக வைப்பாய் என நினைக்கிறேன். பொருளை முடிவு செய்து விட்டு, பந்தயத்தைத் துவக்குவோம், என்றான்.

அண்ணா! ஒவ்வொரு பொருளாக வைப்போம். வெற்றி பெற்றவர் எடுத்துக் கொள்வோம், என்ற நளன், முதலில் தன் கழுத்தில் கிடந்த தங்க மணிமாலையை பந்தயத்தில் வைத்தான். புட்கரன் தான் ஏறி வந்த எருதை பந்தயப்பொருளாக வைத்தான். அந்த எருதை யாராலும் அடக்க முடியாது. எதிர்ப்போரைக் கொன்று விடும். அப்படிப்பட்ட பலமிக்க எருது தனக்கு கிடைத்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அது உதவுமென நளன்நம்பினான்.பகடைக்காய் உருள ஆரம்பித்தது. முதல் உருளலிலேயே சனீஸ்வரன் தன் வேலையைக் காட்டிவிட்டார். காய்கள் புட்கரனின் சொல்லைக் கேட்டன. அவன் முத்துமாலையை வென்றான்.நளனே! நீ இழந்தது மிகச்சாதாரணமான பொருள். உம்...பெரிய பொருள் ஒன்றை வை. நானும் அதையே வைக்கிறேன், என்றான் புட்கரன். நளன் இரண்டு லட்சம் பொற்காசுகளை பந்தயப்பொருளாக வைத்தான். புட்கரனும் அதே அளவு ஒரு பையில் கட்டி வைத்தான். நளனும் புட்கரனும் அடுத்தடுத்து காயை உருட்டினர். நான்கு லட்சம் பொன்னும் போய்விட்டது புட்கரனுக்கு.நளனுக்கு கோபம் தலைக்கேறியது. கெட்டதைச் செய்யும் போது மனிதனுக்கு நிதானம் தவறுவது இயற்கை. உணர்ச்சிப்பிழம்பாக இருந்த நளன், தான் விட்ட நான்கு லட்சம் பொன்னையும், மணிமாலையையும் திரும்பப் பெறும் வகையில், புட்கரனே! நான் கோடி தங்கக்காசுகளை பந்தயப்பொருளாக வைக்கிறேன். நீ தயாரா? என்றான்  ஆவேசமாக. புட்கரன் சற்று கேலியான தொனியுடன், நளனே! இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். நீ ஏதோ குழந்தை விளையாட்டு போல முத்துமாலை, இரண்டு லட்சம் என பந்தயப்பொருளை வைத்தாய். நானும் ஒரு கோடி வைக்கிறேன். பகடை உன் கைகளுக்கு பணிந்து நடந்தால், இப்போதே இரண்டு கோடி பொற்காசுகளுக்கு அதிபதியாகி விடுவாய். ஏற்கனவே நீ செல்வன், செல்வர்களைத் தேடித்தான் செல்வம் வரும். நானும் கோடி பொற்காசுகள் வைக்கத் தயார், என்றவன், பொன்மூடைகளை அடுக்கும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். பகடைகள் உருண்டன.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar