சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி விழா, 10 நாட்களாக நடைபெற்றது. தினமும் அம்மன் மண்டகபடிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாவிளக்கு, பொங்கல், முடி காணிக்கை, கயிறு குத்து என, பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அம்மன் திருத்தேரில் எழுந்தருள நேற்று தேரோட்டம் நடந்தது.நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலைக்கு வந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.