இந்தமாதம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் ஐந்து கிரக சேர்க்கையில் உள்ள சுக்கிரன், புதன் நல்ல பலன்களை தருகின்றனர். பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குருபகவானும் பலவித நன்மைகளைத்தருகிறார். இளைய சகோதர, சகோதரிகள் உங்களிடம் கருத்து வேறுபாடு கொள்கிற கிரக நிலை உள்ளது. பொறுமை காப்பதால் சொந்தங்கள் நம்மை விட்டு பிரியாமல் இருக்கும். வீடு வாகன வகையில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவை விட புதிய இனங்களில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். நண்பர்களின் ஆலோசனை புதிய செயல்களை நிறைவேற்ற உதவியாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை பெருமளவில் தவிர்த்திடுங்கள்.தொழிலதிபர்கள் அதிக ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தியில் முன்னேற்றமும், தாராள பணவரவும் பெறுவர். அபிவிருத்தி பணிகள் ஓரளவு நிறைவேறும். வியாபாரிகள், அதிக வாடிக்கையாளர் கிடைத்து அதிக விற்பனையும், தாராள லாபமும் பெறுவர். பணியாளர்கள், திட்டமிடுதலுடன் செயல்பட்டுவேலையை வேகமாக முடிப்பர். தாமதமான சலுகைகள் எளிதாக கிடைக்க வாய்ப்புண்டு.குடும்பப் பெண்கள், நிம்மதியான மனதுடன் அன்றாடப் பணிகளை மேற்கொள்வர். பணவிஷயத்தில் தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள், நிலுவைப்பணிகளை நிறைவேற்றி, நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகைகளும் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை அதிகரித்து நல்ல லாபம் பெறுவர்.அரசியல்வாதிகள், பகைவர்களிடம் இருந்து விலகுவதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். விவசாயிகள் சாகுபடிக்காக அதிக பணச்செலவை எதிர்க்கொள்வர். கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் எதிர்கால படிப்புக்குரிய நுழைவுத்தேர்வு உள்ளிட்டவைகளில் சிறப்பான தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும். உஷார் நாள்: 8.5.13 அதிகாலை 5.30- 10.5.13 மதியம் 3.14. வெற்றி நாள்: ஏப்ரல்- 27,29 நிறம்: வெள்ளை, சிவப்பு எண்: 2,9
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »