அன்பையும், பண்பையும் உயிர் மூச்சாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான மீனத்தில் உள்ள புதன் ஏப்ரல் 21 வரை நல்ல பலன்களைத் தருகிறார். அதன்பின், ஐந்து கிரக சேர்க்கையாக மேஷத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேதுவுடன் இடம் பெறுகிறார். உங்கள் சிந்தனைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும் என்பதால், இருப்பதைக் கொண்டு சிறப்பான வாழ்வு நடத்த திட்டமிடுவீர்கள். புத்திரர்கள் ஆன்மிக, தத்துவ விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்பர். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவை விடசெலவு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுக்கு வேண்டாத சிலர், பிறரிடம் உங்கள் பெயரைப் பயன்படுத்தி லாபம் பெற முயற்சிப்பர். கடவுளே துணை என இம்மாதத்தில் அமைதி காப்பது நல்லது. தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறையை சரிசெய்ய கூடுதல் பணத்தேவையை எதிர்கொள்வர். வியாபாரிகள் போட்டியை சமாளிக்க லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். பணியாளர்கள்,ஒருமனப்பட்ட மனதுடன் பணி செய்வதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத தன்மை இருக்கும். குடும்பப் பெண்கள் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பது நல்லது. பணிபுரியும் பெண்கள், குடும்பச் சூழ்நிலைகளை பணிபுரியும் நேரங்களில் நினைக்காமல் செயல்பட்டால் மட்டுமே பணிகளை வேகமாக முடிக்க முடியும். சுயதொழில் புரியும் பெண்கள், கடனுக்கு கிடைக்கிறதென்று அதிக பயன்பாடு தராத தொழிற்கருவிகளை வாங்க வேண்டாம். அரசியல்வாதிகள் சமரசபேச்சு வார்த்தைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் தங்களுக்கு வரும் கெட்ட பெயரில் இருந்து தப்பிக்கலாம். விவசாயிகள் அளவான மகசூலும், கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபமும் பெறுவர். மாணவர்கள் கவனமுடன் படிப்பதுஅவசியம்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் கஷ்டம் குறைந்து மனதில் நம்பிக்கை வளரும். உஷார் நாள்: 14.4.13 காலை 6- 15.4.13 இரவு 7.14 மற்றும் 10.5.13 மதியம் 3.15- 12.5.13 இரவு 2.37. வெற்றி நாள்: ஏப்ரல் 30, மே 1 நிறம்: ரோஸ், மஞ்சள் எண்: 1.3
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »