பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
02:04
உழைப்பே உயர்வு தரும் என்பதில் நம்பிக்கையுள்ள கும்பராசி அன்பர்களே!
இந்தமாதம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், கேது ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை, ஏப்ரல் 21ல் மிகச்சிறப்பாக அமைகிறது. இதனால், உங்கள் வாழ்வில் பலவித வளமும், நலம் தரும் பயன்களும் அதிகரிக்கும். வீடு வாகனத்தில் அபிவிருத்தி மாற்றம் செய்வீர்கள்.புத்திரர்கள், உங்கள் சொல்கேட்டு நடப்பர்.கணவன், மனைவி விட்டுக்கொடுத்து நடந்து குடும்ப வாழ்வை சிறப்பாக்குவர். நண்பர்களால் உதவி கிடைக்கும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பை அதிகப்படுத்தலாம்.தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைத்து உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இலக்கை அடைவர். லாபம் எதிர்பார்த்ததை விட தாண்டும். வியாபாரிகள் அதிக விற்பனை செய்து உபரி வருமானம் காண்பர். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை வேகமாக முடித்து அதிகாரிகளிடம் நற்பெயரும், சலுகைகளும் பெறுவர்.பணிபுரியும் பெண்கள், சுறுசுறுப்பாக செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். மனதில் நிம்மதியும், பெருமிதமும் ஏற்படும்.குடும்பப் பெண்கள், கணவரின் கருத்துக்களை மனப்பூர்வமாக மதித்து குடும்ப நலம் பேணுவர். பணவசதி தாராள அளவில் அமைந்து குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். சுயதொழில் புரியும் பெண்கள், அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி, விற்பனை உயர்ந்து லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் மூலம பணவரவு இருக்கும். பொறுப்பான பதவியை எளிய முயற்சியால் அடைவர். விவசாயிகள் பயிர் வளர்ப்பில் ஆர்வமுடன் செயல்பட்டு அதிக மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் இருக்கும். மாணவர்கள் எதிர்காலப் படிப்புக்குரிய நுழைவுத்தேர்வில் சிறப்பிடம் பெறுவர். விரும்பிய கோர்சில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் பொன், பொருள் சேரும்.
உஷார் நாள்: 22.4.13 இரவு 12.25 மணி முதல் 25.4.13
அதிகாலை 5.40 மணி வரை
வெற்றி நாள்: மே 8,9,10
நிறம்: நீலம், ஆரஞ்சு
எண்: 1, 8