Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராவணனுக்கு பத்து தலை வந்தது எப்படி? கஷ்டங்களை ஏன் கடவுளிடம் சொல்கிறோம்? கஷ்டங்களை ஏன் கடவுளிடம் சொல்கிறோம்?
முதல் பக்கம் » துளிகள்
அன்றே சாட்டையை சுழற்றிய ராஜராஜசோழன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 மே
2013
04:05

ராஜராஜசோழன் ஆன்மிகத்தில் எந்தளவுக்கு உயர்ந்தவனோ, அந்தளவுக்கு அரசு நிர்வாகத்திலும் சிறந்தவன். இவனது காலத்தில் ஐந்து வாரியங்கள் இருந்தன.சம்வத்சர வாரியம் வழக்குகளை விசாரிக்கும். ஏரி வாரியம் வாய்க்கால், குளக்கரைகளைப் பாதுகாத்தல், தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். நிலவளம் குறித்து ஆய்வு செய்து தீர்வளிப்பது தோட்ட வாரியம். பொற்காசுகளையும், செப்புக்காசுகளையும் ஆய்வு செய்து போலிகளைக் கண்டுபிடிப்பது பொன் வாரியம் (எப்பவுமே ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்திருக்காங்க) நிலவரி, பிற வரிகளை வசூலிப்பது பஞ்சவார வாரியம்.இந்த வாரியங்களின் நிர்வாகிகளாக கணக்காளர்கள் நியமிக்கப்பட்டனர். வாரியங்களை கண்காணிக்க ஒரு சபை இருந்தது. சபையாளர்கள் கேட்கும்போது, கணக்காளர்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.

கணக்காளருக்கு சம்பளம் என்ன தெரியுமா?தினமும் ஒருநாழி நெல், வருடத்துக்கு ஏழரை கழஞ்சு (39.750 கிராம்) தங்கம் போனஸ், இரண்டு சீருடை. கணக்கை வாசிக்கும்போது, என் மனதறிந்து இதில் எந்தத் தவறுமில்லை. யாருக்கும் எந்த சலுகையும் காட்டவில்லை, என்று உறுதி சொல்ல வேண்டும். சும்மாவா! பழுக்கக் காய்ச்சிய கோடரியை கையில் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும். கணக்கை முடித்ததும், கையில் காயம் படாமல் இருந்தால் ஏழேகால் கழஞ்சு (உத்தேசமாக 38.425 கிராம்) தங்கம் சிறப்பு போனஸ். காயம் பட்டாலோ, கழுதை மேல் ஏற்றி, சாட்டையால் அடித்து ஊர்வலம்... பத்து கழஞ்சு (53 கிராம்) தங்கம் அபராதம் வேறு. அபாராதம் கட்டாவிட்டால் சிறை.அந்தக் காலத்திலே ராஜாக்கள் நேர்மையா இருந்திருக்காங்க! இப்ப இது மாதிரி தண்டனை பத்தி பேசினாலே, மனித உரிமையை பறிச்சுட்டோமுனு போர்க்கொடி தூக்கிட மாட்டாங்களா என்ன!

 
மேலும் துளிகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. பிரதோஷமான இன்று சிவனை வழிபட சிறப்பான ... மேலும்
 
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
உடுப்பி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கோவில்கள் தான். இத்தகைய ஊரில் இருப்பதற்கு புண்ணியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar