பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
நல்ல நெறிகளை பின்பற்றி வாழும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழாம் இடத்தில் அனுகூலக் குறைவாக உள்ளார். மாத முற்பகுதி நாட்களில் குருவும், பிற்பகுதி நாட்களில் சுக்கிரனும் நற்பலன்களை வழங்குவர். உங்கள் நேரத்தை வீணாக்கும் வகையில் சிலர் அரட்டைக் கச்சேரி நடத்துவர். அவர்களிடம் இருந்து விலகிக்கொள்வதால் உங்கள் பணிகள் நேரத்திற்கு முடியும். இளைய சகோதரரின் மனக்கஷ்டங்களை ஆறுதல் வார்த்தையால் சரிசெய்வீர்கள்.வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம் தருவதால் சிரமம் வரலாம் கவனம்.பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்திற்கேற்ப பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் திறமையை வளர்த்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர்.எதிரிகளிடம் இருந்து விலகுவதால் மன அமைதியை பாதுகாத்துக் கொள்ளலாம். உடல்நலம் பலம்பெறும். தம்பதியரிடையே பேச்சு காரணமாக கருத்து வேற்றுமை வரும். நிதானமாக நடந்து கொள்ளவும். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் அக்கறை கொள்வர். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாரான அளவில் கிடைத்து உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கும். வியாபாரிகள் விற்பனை அளவு குறைந்து நடைமுறை செலவுகளுக்கு சேமிப்பு பணத்தை பயன்படுத்துவர். பணியாளர்களுக்கு வேலைகள் முடிய தாமதமாகும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும்.குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேற்றுமை கொண்டாலும், அதை சரிசெய்யும் விதத்தில் நிதானமாகப் பேசி சமாளிப்பர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்றுவதால் ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான பணவரவு காண்பர்.அரசியல்வாதிகள், சமரச பேச்சுக்களில் இருதரப்பு நியாயத்தையும் உணர்ந்து பேசுவதால் மட்டுமே பகை வராமல் தவிர்க்கலாம். விவசாயிகள் சுமாரான மகசூல், அதற்கேற்ற பணவரவு பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராக இருக்கும்.
உஷார் நாள்: 15.5.13 காலை 5- மதியம் 2.11 மற்றும் 9.6.13 காலை 9.51- 11.6.13 இரவு 9.30.
வெற்றி நாள்: மே 29, ஜூன் 5, 6
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 2, 5
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சி சீராகும்.