பதிவு செய்த நாள்
07
மே
2013
12:05
சுறுசுறுப்புடன் செயல்படும் தன்மையுள்ள தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு மே 28ல் பெயர்ச்சியாகி ராசியை பார்க்கிறார். இதனால் மாத பிற்பகுதி நாட்களில் அளப்பரிய நன்மை வந்து சேரும். சூரியன், செவ்வாய், சனி, ராகு அனுகூல அமர்வு பெற்றும் தன் பங்கிற்கு நற்பலன்களை தாராளமாக வழங்குகின்றனர். இதனால் உங்கள் மனதில் உறுதியும் செயல்களை நிறைவேற்றுவதில் அக்கறையும் கொள்வீர்கள்.சிறிய செயல்களும் நேர்த்தியாக அமையும். பாராட்டும், புகழும் கிடைக்கும். புதிய வாகனம், வீடு, மனை வாங்க திட்டமிடுபவர்களுக்கு முயற்சி இனிதாக நிறைவேறும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை உயர்தரம் உள்ளதாக வாங்கித் தருவீர்கள்.உங்களின் வியத்தகு வாழ்வியல் நடைமுறையை பார்த்து எதிரிகள் வியப்புடன் விலகுவர். தாராள பணவரவினால் கடன் தொகைகளை பெருமளவில் செலுத்துவீர்கள்.உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியர் விட்டுக்கொடுத்து செல்வதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். நண்பர்களிடம் உதவி பெறுவதிலும் உதவுவதிலும் நிதான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது.தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து உற்பத்தி, பணவரவில் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து அதிக விற்பனை, உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.குடும்பப் பெண்கள் கணவரிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சலுகைப்பயன் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவர். உற்பத்தி, விற்பனை செழித்து பணவரவு கூடும். அரசியல்வாதிகள் நன்மதிப்புடன் கூடிய பதவி பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் செழிக்கும். கால்நடை வளர்ப்பிலும் அதிக லாபம் கிடைக்கும். மாணவர்கள், உயர்படிப்புக்கு எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
உஷார் நாள்: 15.5.13 மதியம் 2.12-17.5.13 இரவு 12.24 மற்றும் 11.6.13 இரவு 9.31- 14.6.13 காலை 7.57.
வெற்றி நாள்: ஜூன் 1, 7, 8
நிறம்: ஊதா, சிவப்பு எண்: 1, 8
பரிகாரம்: முருகனை வழிபடுவதால் பொன், பொருள், மனை வாங்க அனுகூலம் வளரும்.