திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாரங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு சக்தி கரக ஊர்வலமும், மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 3 மணிக்கு ஊரணி பொங்கல், மாலை 6 மணிக்கு கும்பம் கொட்டுதல், இரவு 11 மணிக்கு வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் மாலதிசவுந்தர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.