பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
திருவாரூர்: நெம்மேலியில், 61 ஆண்டுகளுக்கு முன், புயலில் சேதமடைந்த சிவன் கோவில், கட்டுமானப்பணி தீவிரமாக நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, நெம்மேலியில், அபூர்வநாயகி சமேத, அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இது, 1952 ம் ஆண்டு, புயலில் சேதமடைந்தது. வினாயகர், பாலசுப்ரமணியர், அகஸ்தீஸ்வரர், அபூர்வநாயகி, குரு பகவான், பலிபீடம், சண்டிகேஸ்வரர் மற்றும் நந்தி உள்ளிட்ட கலை நயமிக்க சிலைகள், பராமரிப்பில்லாமல் கிடந்தன. அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கிணங்க, ஸ்ரீவாஞ்சியம் நடராஜ அய்யர், ஆன்மிக திருப்பணிகள் செய்து வரும், சென்னை, மகாலட்சுமி சுப்ரமணியனுக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பின், நேரில் ஆய்வு செய்தவர், சிவத்தொண்டர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் ஒத்துழைப்புடன் , கோவில் கட்டும் பணியைத் துவக்கினார். கட்டுமானப்பணி மிகவும் துரிதமாக நடந்து வருகிறது. கோவிலுக்கு பொருளுதவி செய்ய விரும்பும் ஆன்மிக அன்பர்கள், திருப்பணி கமிட்டியினர், ஸ்ரீ அபூர்வநாயகி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமி கோயில், நெம்மேலி, நன்னிலம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரியையும், 94472-24555, 97502-48416 என்ற மொபைல் @பான் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.