பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
11:06
மதுராந்தகம்: கோதண்டராமர் கோவிலின் உற்சவ வாகனங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதால், சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.வாகன மண்டபம்மதுராந்தகம் நகரில், ஏரி காத்த ராமர் என, அழைக்கப்படும் கோதண்டராமர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வெளிபுறத்தில், வாகன மண்டபம் உள்ளது. திருவிழா காலங்களில், பெருமாள், யானை வாகனம், குதிரை வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, ரிய பிரபை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா செல்வது வழக்கம். விழா முடிந்தவுடன், மேற்கண்ட வாகனங்களை, கோவில் வளாகத்தில் உள்ள வாகன மண்டபம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் வைத்து, பராமரித்து வந்தனர். இந்நிலையில், சமீப காலமாக, கோதண்டராமர் கோவிலுக்கு, சொந்தமான வாகன மண்டபத்தில் உள்ள வாகனங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
சிலைகளும் சேதம்: இதனால், வாகனங்கள் முழுவதும் தூசி மற்றும் ஒட்டடைகள் பரவி, சீரழிந்து வருகின்றன. சொர்க்க வாசல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளும், இதே நிலையில் காணப்படுகின்றன. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் சிலைகளை சீரமைத்து, பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.