திருப்போரூர்: திருப்போரூர் செங்கழுநீர் அம்மன் கோவிலில் அமாவாசை உற்சவம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் சேவை விசேஷமாக நடத்தப்படுகிறது.நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி விசேஷ அபிஷேகம், மலர் அர்ச்சனை, தீப, தூப ஆராதனை நடத்தப் பட்டது. பின்னர், ஊஞ்சலில் அம்மன் மலர் அலங்காரத்தில் இருந்தபடி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.புதுப்பாக்கம்: புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் மலைக்கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. சனிக்கிழமை தினத்தில் அமாவாசை வந்ததால், பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. உற்சவர் ஆஞ்சநேயர் வடைமாலை, துளசி மாலை சார்த்தலுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.