பதிவு செய்த நாள்
13
ஜூன்
2013
10:06
பழநி: பழநியில் வைகாசி கடைசி சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு ஏராளமான திருமணங்கள் நடந்தது. பக்தர்கள் குவிந்ததால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பழநி கோயிலுக்கு வழக்கமாக தினமும் ஏராளமானவர்கள், வந்து செல்கின்றனர். நேற்று வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால், திருஆவினன்குடி கோயிலில் 200க்கு மேற்பட்ட திருமணங்கள் நடந்தது.திருமண மண்டபங்கள், மடங்கள், லாட்ஜகள் அனைத்தும் நிரம்பி இருந்தது. மணமக்கள், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல, வின்ச் ஸ்டேசனில் இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். மலைக்கோயிலில் பொது தரிசன வழியில் 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து பாதிப்பு: கோயிலுக்கு முக்கியவீதிகளான அடிவாரம், அய்யம்புள்ளிரோடு, பூங்கா ரோடு, சன்னதிவீதி வையாபுரி குளத்துரோடு, அருள் ஜோதி வீதி, கிரிவீதி பாதைகளில், திருமண கோஷ்டி, பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருஆவினன்குடி, பூங்காரோடு பகுதிகளில் வழக்கத்திற்கும் கூடுதலான வாகனங்கள், ரோட்டின் இருபுறங்களிலும் நிறுத்தி இருந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாத காரணத்தால் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.