பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
ஜம்மு: பலத்த பாதுகாப்புக்கு இடையே, முதல் குழு, அமர்நாத் யாத்திரைக்காக, நேற்று ஜம்முவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. காஷ்மீர் மாநிலத்தில், பிரசித்தி பெற்ற, அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு, பனிக் கட்டிகளில் உருவாகும், லிங்கத்தை தரிசிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாலும், பனிப் புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாலும், இந்த யாத்திரை, சவாலான விஷயமாக கருதப்படுகிறது. இதற்கிடையே, இந்தாண்டுக்கான யாத்திரை செல்லும் பக்தர்களின், முதல் குழு, நேற்று, ஜம்முவிலிருந்து புறப்பட்டது. காஷ்மீர் போலீசார், ராணுவம், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், யாத்திரை பாதையில், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதக, காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.