பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை, சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில், ஆனி தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில்,ஆனி திருவிழா கடந்த 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி,அம்பாளுடன் பல்வேறு அவதாரத்தில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று,தேரோட்டம் நடந்தது. காலை 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர், சப்பரங்களில் அம்பாளும், பிரியாவிடையுடன் சுவாமி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.நேற்று மாலை 5 மணிக்கு,பொதுமக்கள் ஒருசேர, வடத்தை பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கினர். அறந்தாங்கி ரோட்டில் வந்தபோது, தேர் சக்கரம் சிக்கியது. பின்னர் சரி செய்யப்பட்டது. கலெக்டர் ராஜாராமன் முன்னிலையில், எஸ்.பி.,அஸ்வின் கோட்னீஸ் தலைமையில், காரைக்குடி டி.எஸ்.பி., மங்களேஸ்வரன் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.