பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டு புடவைகளை, பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.சத்தியமங்கலம் அடுத்துள்ளது, பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நேற்று முன்தினம் மதியம் தொடங்கி, நேற்று மதியம் வரை அமாவாசை இருந்ததால், கடந்த இரண்டு நாளாக பண்ணாரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.பண்ணாரி அம்மனுக்கு, பட்டு புடவைகள் நேர்த்தி கடனாக பக்தர்கள் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் கொடுக்கும் பட்டு புடவைகள், அம்மனுக்கு சாத்தப்படும். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், அம்மனுக்கு சாத்தப்படும் புடவைகள், ஏலம் விடப்படும். ஆனி அமாவாசையை முன்னிட்டு நடந்த பட்டு புடவைகள் ஏலத்தில் மொத்தம், 159 பட்டு புடவைகள் ஏலம் போனது. பக்தர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். ஏலம்போன பட்டுபுடவைகளின் மதிப்பு, 33 ஆயிரத்து, 860 ரூபாய் ஆகும்.