உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2013 01:07
உசிலம்பட்டி: உசிலம்பட்டி திருமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14 ல் நடைபெறுகிறது. விக்னேஸ்வர பூஜைகள் காலை துவங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. இரண்டு, மூன்றாம் கால பூஜைகளும், 13ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம்கால பூஜைகள், யந்திர பிரதிஷ்டை, மருந்து சார்த்துதல் நடக்கிறது. 14 காலை 7. 00 மணிக்கு பூஜைகள் துவங்கி 8.30 முதல் 9.15 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறவுள்ளது. சர்வசாதகம் கடத்தூர் அர்ச்சகர் அகிலரசு, சாதகம் பழனி பாடசாலை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் முன்னின்று பூஜைகளை நடத்துகின்றனர். அறங்காவலர்களும், திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.