பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
செய்யும் தொழிலில் தனிமுத்திரை பதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
11-ல் உள்ள செவ்வாய்,குரு,3-ல் உள்ள சனி,ராகுநன்மை தருவார்கள். புதன் 10-ம் இடமான மிதுனத்தில் இருந்து ஜூலை30 வரை நன்மை தருவார். அதன்பின் அவர் கடகத்திற்கு வருவதால் நன்மை இருக்காது. சுக்கிரன் ஜூலை18 க்கு பிறகு சிம்மத்திற்கு மாறுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்க பெறும். எனவே இது சிறப்பான மாதமாக இருக்கும்.பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களால் பொருள் சேரும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஜூலை17, ஆகஸ்ட் 13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூலை30 க்கு பிறகு உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியிருக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்வோர்க்கு சனிபகவான் பொருளாதார வளத்தையும்,தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார். ஜூலை30க்கு பிறகு எதிரிகள் வகையில் கவனமாக இருக்கவும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். ஆகஸ்ட் 8,9ல் திடீர் பணவரவு இருக்கும். ஆகஸ்ட் 6, 7,10,11,12ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஆகஸ்ட் 12க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.மாணவர்களுக்கு குரு பக்க பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஜூலை30வரை புதனும் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வி, போட்டிகளில் வெற்றி காணலாம்.விவசாயத்தில் சீரான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். பெண்கள் குடும்பத்தில் போற்றப்படுவர். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். புண்ணியத்தலங்களுக்கு சென்று வரலாம். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
நல்ல நாட்கள்: ஜூலை17,23,24,25,26,ஆகஸ்ட்1,2,3, 4,5,8, 9,13,14.
கவன நாட்கள்: ஜூலை27,28 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,9
நிறம்: நீலம்,சிவப்பு, ஜூலை30 வரை பச்சை.
வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை சூரியனை வழிபட்டு ஏழைகளுக்கு கோதுமை, துவரம்பருப்பு தானம் செய்யலாம். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள்.