பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
அதிகாரத்துக்கு அடிபணியாத கடகராசி அன்பர்களே!
சுக்கிரன் 1ல் இருந்து, ஜூலை18ல் 2ம் இடத்திற்கு வந்தாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். ராசியில் இருக்கும்சூரியன், கேது,12ல் உள்ள செவ்வாய், குரு, புதன், 11ல் உள்ள கேது , 4ல் உள்ள சனி,ராகுவால் நன்மை கிடைக்காது. சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3ம் இடத்து பார்வை சிறப்பாக அமைந்துள்ளதால் அதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறலாம். எந்த செயலையும் முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிக்கும்.விருந்து விழா என சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூட காலதாமதம் ஆகலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. கவனம்.வீட்டில் இருந்த பிரச்னை ஆகஸ்ட் 15க்கு பிறகு சரியாகி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாயால் பித்தம் மயக்கம், வயிறு பிரச்னை வரலாம். பணியாளர்களுக்கு சோர்வு ஏற்படும். ஜூலை30 க்கு பிறகு சிலர் இடமாற்றம் காண வாய்ப்பு உண்டு. அது தற்போது உங்களுக்கு பிடிக்காததாக இருந்தாலும், போகப்போக சாதகமானதாக அமையும். தொழில், வியாபாரம் சீராக அமையும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். ஜூலை18க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்கலாம். ஜூலை30க்கு பிறகு எதிரிகளின் தொல்லை மறையும். ஆகஸ்ட் 3,4,5,8,9ல் சந்திரனால் சிறு தடை வரலாம். ஆகஸ்ட் 6,7ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.மாணவர்கள் ஆசிரியர்களிடம் அறிவுரை கேட்கவும். குரு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் தீவிர கவனம் செலுத்தி படிக்கவும். விவசாயிகள் அதிக உழைப்பை சிந்த வேண்டியிருக்கும். ஆனால், அதே அளவுக்கு வருமானம் கிடைக்கும். பெண்கள் குதூகலமாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.
நல்ல நாட்கள்: ஜூலை21,22,23,24,29,30,31, ஆகஸ்ட் 1,2, 6,7,10,11,12
கவன நாட்கள்: ஜூலை25,26 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,5
நிறம்: வெள்ளை, பலவண்ணக் கலவை.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.