பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
ரகசியங்களை காப்பாற்றுவதில் வல்லவரான மீனராசி அன்பர்களே!
புதன் ஜூலை30 வரை 4-ம் இடமான மிதுனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை கொடுப்பார். சுக்கிரன் ஜூலை18 வரை நற்பலனை கொடுப்பார். சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்களால் எந்த நன்மை இல்லை. அதற்காக கவலை வேண்டாம். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆகஸ்ட் 10,11,12ல் பெண்களால் பலனை எதிர்பார்க்கலாம். இதன் பிறகு அவர்களால் தொல்லையே. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். சுக்கிரனால் விருந்து விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் சிறப்படையும். ஆகஸ்ட் 1 வரை பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்டவும். ஜூலை 18, 19,20, ஆகஸ்ட் 16ல் ஒருவித பயம் ஆட்கொள்ளும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவர். ஜூலை 21,22ல் எதிர்பாராத நன்மைகளை பெறலாம். ஜூலை 30க்கு பிறகுஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருந்து வரலாம். பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். பொருள் களவு போக வாய்ப்புண்டு. பகைவர் தொல்லை அதிகரிக்கும். ஜூலை 30க்குபிறகு வெளியூர் பயணம் உண்டு. ஜூலை 27,28ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.கலைஞர்கள் சிறப்பு பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். . ஜூலை 30 வரை புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயத்தில் நல்ல வருமானம் உண்டு. வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். பெண்கள் ஆகஸ்ட் 1,2ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
நல்ல நாட்கள்: ஜூலை 21,22,23,27,28,ஆகஸ்ட் 1,2, 8,9,10,11,12.
கவன நாட்கள்: ஜூலை 27,28,29 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்கள்: 4,5 நிறம்: வெள்ளை, ஆகஸ்ட்14 வரை பச்சை.
வழிபாடு: சிவன், பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். காலையில் சூரியதரிசனம் செய்து ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.