பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் ஆடி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நேற்று நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி - பூமாதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் காலை 10 மணிக்கு வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக மதியம் 1 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. இன்று காலை தீர்த்தவாரி நடக்கிறது.