திருநெல்வேலி: கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலய திருவிழா நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 27ம் தேதி தேர் பவனி நடக்கிறது. கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் திருப்பலி மறையுரை, சிறப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நேற்று சேவியர் காலணி பங்குத்தந்தை சந்தியாகு திருப்பலி மறையுரையும், தூய யோவான் அப்னியம் சார்பில் டான்போஸ்கோ மன்ற இளையோர் சிறப்பு நிகழ்வு நடந்தது. இன்று (23ம் தேதி) கோவில்பட்டி பங்குத் தந்தை பீட்டர் அடிகளின் திருப்பலி மறையுரையும், தூய லூக்கா அன்பியம் மறைக்கல்வி மன்ற நிகழ்வும் நடக்கிறது. நாளை (24ம் தேதி) புனித அந்தோணியார் மறை மாவட்டத் திருத்தலம் அதிபர் ராஜேஷ் திருப்பலி மறையுரையும், புனித ஜேம்ஸ் துவக்கப்பள்ளி பள்ளிக் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை திருப்பலி மறையுரையும், சிறப்பு நிகழ்வுகளும் நடக்கிறது. 27ம் தேதி தேர் பவனியும், 28ம் தேதி புனிதரின் பெருவிழா நிறைவு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.