தென்காசி: தென்காசியில் நேற்று ஆடித்தபசை முன்னிட்டு மேலச்சங்கரன்கோயிலில் தபசுக்காட்சி நடந்தது.தென்காசியில் உள்ள மேலச்சங்கரன் கோயிலில் நேற்று ஆடித்தபசை முன்னிட்டு தபசு காட்சி நடந்தது. ஆண்டுதோறும் ஆடிமாதம் பன்னிரண்டு நாட்கள் திருவிழாவுடன் தென்காசி சங்கரன்கோயிலில் ஆடித்தபசு விழா நடைபெற்று வருகிறது.இதை முன்னிட்டு இந்த ஆண்டு கடந்த 12ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய விழா தொடர்ந்து தினமும் ஒரு மண்டகப்படிதாரர் விதம் விழா நடந்தது 3ம் திருநாளில் சிம்ம வாகனமும், 6ம் திருநாளில் அன்ன வாகனமும், 7ம் திருநாளில் புஷ்ப பல்லாக்கு என தினமும் சப்பரத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து 11ம் திருநாளான நேற்று மாலை 5.40 மணியளவில் தென்காசி தெற்கு மாசி வீதியில் தபசுக்காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு எரிந்தும் "ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர என கோஷம் எழுப்பியும் சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்றனர். இதை தொடர்ந்து இரவும் 10 மணியளவிலும் இரவுக்காட்சியும் நடந்தது. இதை தொடர்ந்து இன்று(23ம் தேதி) இரவு 7.40 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.