பதிவு செய்த நாள்
06
ஆக
2013
10:08
தூத்துக்குடி : தூத்துக்குடி, பனிமய மாதா சர்ச் திருவிழாவில், 15வது தங்க தேரோட்டம் நடந்தது; ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். பனிமயமாதா சர்ச்சின், 431வது ஆண்டு திருவிழாவும், ஆலயம் அமைக்கப்பட்ட, 300வது ஆண்டு நிறைவு விழாவும் நடந்தது. ஜூலை 26ல், கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு, மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, தேர் திருப்பலி நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் மாதா சொரூபம் பொருத்தப்பட்டு, காலை, 7:40 மணிக்கு தங்கத் தேரோட்டம் துவங்கியது. "மரியே வாழ்க என்ற கோஷத்துடன், பக்தர்கள் வடம் பிடித்தனர். மதியம், 12:00 மணிக்கு தேர், நிலையை அடைந்தது. இன்று காலை, 6:30 மணிக்கு, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவில், வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து, ஐந்து லட்சம் பக்தர்கள், மாதா தரிசனம் செய்தனர்.