பதிவு செய்த நாள்
23
ஆக
2013
11:08
நாமக்கல்: நாமக்கல் சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றம் சார்பில், சாய் தபோவனம் திருக்கோவில் திருப்பணி துவக்க விழா, நாமக்கல்-பரமத்தி சாலை, தொட்டிப்பட்டி, அசோக் லேலாண்ட் டிரைவிங் ஸ்கூல் எதிரில் நடந்தது. பகல், 1 மணிக்கு, கரூர் சின்மயா மிஷன் பூஜ்யஸ்ரீ அனுத்தமாநந்த ஸ்வாமிகளின் வழிகாட்டுதலில், ஹனுமன் சாலிசா ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, மதியம், 2 மணிக்கு, நாமக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தலைவர் பூரணசேவானந்த மஹராஜ் ஸ்வாமிகளின் தலைமையில், சாயிபாபா குரு பூஜை கோலாகலமாக நடந்தது. மாலை, 3 மணிக்கு, பூமி பூஜை நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.