பதிவு செய்த நாள்
28
ஆக
2013
10:08
வத்திராயிருப்பு: சதுரகிரி மலை ஆடி அமாவாசை திருவிழாவை தொடர்ந்து உண்டியல் திறப்பில் ரூ.30.50 லட்சம் வசூலானது.தமிழகத்தின் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் நடைபெறும், ஆடி அமாவாசை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா ஆக., 6ல் நடந்தது. இதை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதை தொடர்ந்து, கோயில் தக்கார் பச்சையப்பன், மதுரை மாவட்ட உதவி ஆணையர் கருணாநிதி, விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷணி, கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி ஆகியோர் முன்னிலையில், மலையில் உண்டியல் திறப்பு நடந்தது. இதில், சுந்தரமகாலிங்கம் கோயிலில், ரூ.26.50 லட்சம், சந்தனமகாலிங்கம் கோயிலில் 2.50 லட்சம், தேங்காய் உடைப்பு, முடிகாணிக்கை டிக்கெட்கள் மூலமாக, ரூ.1.50 லட்சமும் வசூலானது. இது, கடந்த ஆண்டு வசூலை விட, ரூ.8 லட்சம் அதிகமாகும். வசூல் தொகை அனைத்தும், மூடைகளாக கட்டப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அடிவாரம் கொண்டுவரப்பட்டது.