பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
திருத்தணி: முருகன் கோவிலுக்கு, கடந்த மாதத்தில், பக்தர்கள், ரூ.41 லட்சம், 300 கிராம் தங்கம், இரண்டரை கிலோ வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக அளித்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து, ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். கடந்த, மாதம், 4ம் தேதி முதல், இம் மாதம், 2ம் தேதி வரை பக்தர்கள் அளித்த காணிக்கை, கோவில் தக்கர் ஜெயசங்கர், முன்னிலையில், நேற்று முன்தினம், உண்டியல் திறக்கப்பட்டு, ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 41 லட்சத்து 10 ஆயிரத்து 235 ரூபாயும், 300 கிராம் தங்கமும், இரண்டரை கிலோ வெள்ளியும் பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர்.