பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
உதவும் மனப்பான்மை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்கள் நன்மை அளிக்கும் இந்த காலக்கட்டத்தில், இந்த மாதம் மேலும் முன்னேற்றத்தை காணலாம்.சூரியன் 10-ம் இடமான கன்னியில் இருக்கும் காலம் புரட்டாசி மாதம். இங்கு புதன் இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.கல்விக்காரகன் புதன் தற்போது கன்னியில் சூரியனோடு இணைந்திருக்கிறார். அங்கு இருக்கும்போது பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் வளம் சேரும். செப். 23-ந் தேதி 11-ம் இடமான துலாமிற்கு வருகிறார். அங்கும் நன்மையே தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் கூடும். எடுத்த புதுமுயற்சியில் வெற்றி கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். பூமிக்காரகன் செவ்வாய் மாதத் தொடக்கத்தில் கடக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதை உண்டாகும். அக். 9ல் செவ்வாய் சிம்ம ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. முயற்சிகளில் தோல்வி ஏற்படும். பொருள் நஷ்டம் வரலாம். ஆரோக்கியம் குறையலாம். ஆனாலும் செவ்வாயின் பார்வை சிறப்பாக அமையும். அதன் மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். தடை அகன்று வெற்றி காணலாம்.சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். அது சிறப்பான இடம். நல்ல பண வரவு இருக்கும். சொந்தபந்தம் வருகை தருவர். அவர்களால் நன்மை கிடைக்கும். உடல் நலம் பெறும். அக்.4 ல் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. செயல்தடை உருவாகும். பொருள் விரயம் ஏற்படலாம்.முக்கிய கிரகங்களில் குரு7-ம் இடமான மிதுனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப விஷயங்களையும் வாரி வழங் குவார்.சனியும், ராகுவும் சாதகமாக நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். எடுத்த செயலைச் சிறப்பாக முடிக்க உறுதுணையாக இருப்பார்கள்.
நல்ல நாட்கள்: செப்.17,18,19,24,25,26,27,28, அக்.4,5,6,7,11, 12,15,16
கவனநாட்கள்: செப்.29,30,அக்.1
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7 நிறம்: மஞ்சள், நீலம்
வழிபாடு: பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். செவ்வாய்க் கிழமையில் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.