பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
உழைப்பில் நம்பிக்கை கொண்ட மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் கூடுதல் நன்மை கிடைக்கும். கடந்த மாதம் நிலவிய பின்தங்கிய நிலை மறைந்து முன்னேற்றம் பிறக்கும்.சுக்கிரன் தற்போது 10-ம் இடமான துலாமில் உள்ளார். எதிரி தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் ஏற்படும். சுக்கிரன் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுக்கிரன் அக்.4ல் 11-ம் இடத்திற்கு வருகிறார். இதனால், வருமானம் கூடும். உறவினர் வருகை புரிவர். உடல் நலம் கிட்டும்.கல்வி காரகன் புதன் தற்போது 9-ம் இடமான கன்னியில் இருக்கிறார். இதனால், மனவேதனை உருவாகலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் பாதிக்கப்படலாம். புதன் செப். 23-ந் தேதி துலாமிற்கு வருகிறார். 10-ம் இடமான அங்கு அவர் பல நன்மைகளை தருவார். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். பூமிகாரகன் செவ்வாய் 7ல் இருக்கிறார். அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவியால் தொல்லை வரலாம். எதிரி பிரச்னை உருவாகும். உடல் நலம் சுமாராக இருக்கும். அவர் அக். 9ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. குடும்பத்தில் நிலவும் குழப்பம் மறையும். ஒற்றுமை ஏற்படும். உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதை வரலாம். ஆனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது.சூரியன் 9-ம் இடமான கன்னியில் இருக்கிறார். மதிப்பு மரியாதை குறைந்து, அவப்பெயர் வரலாம். வீண்விவாதம் செய்வது கூடாது. அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சீராகும்.துலாமில் இருக்கும் சனி, ராகுவால் நன்மை உண்டாகாது. ஆனால், குருவின் பார்வை படுவதால் அவர்கள் கெடுபலன் தரமாட்டார்கள். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 9-ம் பார்வையால் எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். கேதுவால் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். கவனம்.
நல்ல நாட்கள்: செப்.20, 21,27,28,29,30,அக்.1,6,7,8,9, 10,13,14,17
கவனநாட்கள்: அக்.2,3
அதிர்ஷ்ட எண்கள்: 4,7 நிறம்: பச்சை, வெள்ளை
வழிபாடு: சூரிய வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவுங்கள்.