பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
பொறுமையும் அன்பும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன், சனி துலாம் ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் உங்களுக்கு நன்மை தரும் நிலையில் இல்லை. ஆனால், அவரது 3, 7, 10-ம் இடத்துப் பார்வைகள் சாதமாக அமைந்துள்ளதால், அதன் மூலம் எண்ணற்ற பலனை தருவார். கேது 3ம் இடத்தில் நின்று இறை அருளையும், பொருளாதார வளத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு உங்களின் நட்பு கிரமான குருவும் 5ம் இடத்தில் நின்று, மங்களகரமான வாழ்வை தந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அக். 22ல் வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் முழுமையாக நன்மை தரஇயலாது. ஆனாலும் நற்பலன்கள் தொடரத்தான் செய்யும். ராகு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் குருவின் பார்வை அவர் மீது விழுவதால் அவரால் கெடுபலன்கள் நடக்காது. சூரியன் துலாம்ராசியில் இருக்கும் நிலையில் ஐப்பசி மாதம் பிறக்கிறது. அவரால் நன்மை கிடைக்காது. 9ம் இடத்தில் இருக்கும் அவரால் மதிப்பு மரியாதைக்கு பங்கம் வரலாம். பூமிகாரகன் செவ்வாய் 7ம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். உடல் நலம் சுமாராகவே இருக்கும். கல்விகாரகன் புதன் தற்போது 9-ம் இடமான துலாமில் இருக்கிறார். அதனால்மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். ஆனால், அக்.24ல் வக்ரம் அடைவது உங்களுக்கு சாதகமானது. தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து விடுபடுவர். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, நகைகள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சுக்கிரன் 10ம் இடத்தில் இருப்பதால், எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். அக்.31ல் சுக்கிரன் 11ம் இடத்துக்கு மாறுகிறார். அங்கும் அவரால் நன்மை தொடரும். பணவரவும், சொந்த பந்தங்கள் வருகையும் இருக்கும். உடல்நலம் சுகம் கிட்டும்.
நல்ல நாட்கள்: அக்.19, 20,26,27,28,29,30,நவ.5,6,7,8,11,12, 15,16
கவன நாட்கள்: அக்.31,நவ.1,2
அதிர்ஷ்ட எண்கள்: 6,7. நிறம்: சிவப்பு,வெள்ளை.
வழிபாடு: சூரியன், சனி, ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆதரவற்ற ஏழைப்பெண்களுக்கு உதவி செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை கொடுப்பதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.