பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோவிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்திற்கு, உணவு பாதுகாப்புக்காக வழங்கப்படும், தர நிர்ணய சான்றிதழான, ஐ.எஸ்.ஓ.,- 2000 - 2005 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள, ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், உலக பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பக்தருக்கு, ஒரு லட்டு இலவசமாக, பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்திற்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சாய்பாபா அறக்கட்டளை தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜெயந்த் குல்கர்னியிடம், இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.