பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
மைசூரு: உலக புகழ் பெற்ற, மைசூரு தசரா விழா, "ஜம்பு சவாரியுடன், நேற்று நிறைவு பெற்றது. உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை, கடந்த, 5ம் தேதி, மைசூரு சாமுண்டி மலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னிலையில், ஞானபீட விருது பெற்ற, சந்திரசேகர கம்பாரா, சாமுண்டீஸ்வரிக்கு பூஜை செய்து துவக்கி வைத்தார். விஜயதசமி தினமான நேற்று, 750 கிலோ எடையுள்ள, தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரியை, இரண்டாவது முறையாக, "அர்ஜுனா யானை சுமந்து வந்தது. தேவிக்கு பூஜை செய்த முதல்வர் சித்தராமையா, "ஜம்பு சவாரியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களின் சிறப்புகளை விளக்கும் வகையிலான, 43 ஊர்திகள் இடம் பெற்றன. இவ்விழாவை காண, கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதுவரை இல்லாத அளவில், தசரா விழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மைசூரு அரண்மனை, வண்ண விளக்குகளால் ஜொலித்தது.