மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் "இலவச பேட்டரி காரில் ஆடிவீதிகளில் வலம் வரலாம். சித்திரை வீதிகளை வலம் வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக மாநகராட்சி சார்பில் இலவச பேட்டரி கார் வசதி உள்ளது. இவர்கள், ஆடிவீதிகளில் வலம் வந்து தரிசனம் செய்ய வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் "இலவச பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், எட்டு பேர் பயணிக்கலாம். மாற்றுத்திறனாளி, முதியோர் ஆகியோருடன் ஒருவர் இலவசமாக பயணிக்கலாம். தெற்கு கோபுரம் உட்பிரகாரத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகம் முன் பேட்டரி கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தேவைக்கு 0452-234 4360 க்கு டயல் செய்யலாம்.