கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் சனிக்கிழமை நடைப்பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வருட அபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருட அபிஷேகம், திருமஞ்சனம் சனிக்கிழமை நடைப்பெற்றது.இதனை முன்னிட்டு கோதண்டராமர் மற்றும் உத்சவ மூர்த்திகளுக்கு சந்தனம், தேன், பன்னீர், திரவியம் மற்றும் பால் அபிஷேகம் நடைப்பெற்றது.