கும்பகோணம் அருகில், அரிசிற்கரை புத்தூர் தலத்தில் உள்ள அழகம்மை கோயிலில் தேவியருடன் மயிலின் மீது அமர்ந்து அருள்பாலிக்கும் சுந்தர சுப்ரமணியரை தரிசிக்கலாம். ஆறுமுகங்கள் பன்னிரு கரங்களுடன் திகழும் இவரின் வலக்கரம் ஒன்றில் சங்கும் இடக்கரம் ஒன்றில் சக்கரமும் திகழ்வது சிறப்பு.