பதிவு செய்த நாள்
21
நவ
2013
05:11
கட்டண விபரம்: சபரிமலையில் 40 வகையான பூஜைகள் நடைபெறுகிறது. 12 வகையான வழிபாட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலையில் மண்டல- மகரவிளக்கு காலத்திலும், இதர மாத பூஜை நாட்களிலும் 40 வகையான பூஜைகள் நடைபெறுகிறது. அதன் விபரம் வருமாறு. அடைப்புக்குறிக்குள் கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக பட்ச கட்டணம் படிபூஜைக்கும் வசூலிக்கப்படுகிறது.
உஷபூஜை(501), உச்சபூஜை(2001), நித்ய பூஜை(2501), கணபதிஹோமம் (200), பகவதிசேவை (1000), புஷ்பாபிஷேகம் (2000), களபாபிஷேகம் (3000), அஷ்டாபிஷேகம் (3500), லட்சார்ச்சனை (4000), சகஸ்ரகலசம் (25000), படிபூஜை (40000), உதயாஸ்தமனபூஜை (25000), உற்சவபலி (10000), முழுக்காப்பு (500), சகஸ்ரநாமஅர்ச்சனை (20), அஷ்ட்டேத்தர அர்ச்சனை (20), துலாபாரம் (100), நெய்யபிஷேகம் முத்திரை ஒன்றுக்கு (20), சுயம்வர அர்ச்சனை (25), நவக்கிரகபூஜை (100), ஒற்றைகிரகபூஜை (20), தங்கநகை பூஜை (25), மாலை, பிரம்பு பூஜை (15), கோயில் வளாகத்தில் பறயிடல்- தானிய காணிக்கை (100), கோயிலுக்கு வெளியில் பறயிடல் - தானிய காணிக்கை (120), நவக்கிரக நெய் விளக்கு (15), எழுத்து தொடங்கி வைத்தல் (101), அவல்பொரி நிவேத்யம் (15), அடிமை (100), தங்க அங்கி சார்த்துதல் (7500), வெள்ளி அங்கி சார்த்துதல் (4000), சோறு கொடுத்தல் (100), நாமகரணம் (75), நீராஞ்சனம் (75), உடையாடை சார்த்து (15), உடைஆடை நடைக்கு வைத்தல் (15), மஞ்சள் குங்கும அபிஷேகம் (25), நாகர்பூஜை (25), வரநிவேத்யம் (15) வல்ச நிவேத்யம் (25).
இவற்றில் களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், லட்சார்ச்சனை, சகஸ்ரகலசம், உற்சவபலி ஆகிய பூஜைகளுக்கு தேவையான பொருட்களை பக்தர்களே கொண்டு வரவேண்டும்.
வழிபாடு பிரசாதங்கள்: அப்பம் (25), அரவணை (60), விபூதி பிரசாதம் (15), வெள்ளை சோறு (10), சர்க்கரை பாயசம் (15), பஞ்சாமிர்தம் (50), பஞ்சாமிர்தம்-சிறிய டின் (20), பஞ்சாமிர்தம் - பெரிய டின் (50)அபிஷேக நெய் (50), ஐயப்ப சக்கரம் (120), பூஜிக்கப்பட்ட மணி- பெரியது (70), பூஜிக்கப்பட்ட மணி (40),