சபரிமலை வரும் பக்தர்களுக்கு இந்தியாவில் எங்கும் பேச கட்டண சலுகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2013 10:11
சபரிமலை வரும் பக்தர்களுக்கு பி.எஸ்.என்.எல்., இந்த ஆண்டு தாராளமாக வசதிகளை செய்துள்ளது. பாண்டிதாவளம், ஜோதிநகர், பம்பை ஆகிய இடங்களில் டெலிகாம் சென்டர்கள் செயல்படுகிறது. இங்குள்ள எஸ்.டி.டி. பூத்துகளில் சேவை கட்டணம் கிடையாது. இதனால் இந்தியாவில் எங்கும் ஒரு ரூபாய்க்கு பேசமுடியும். இதுபோல போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் சென்றால் இங்குள்ள இன்டர்நெட் கபேயில் ஐந்து ரூபாய்க்கு ஒரு மணி நேரம் பிரவுசிங் செய்யலாம். பிரின்ட் அவுட் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோல அடையாள அட்டை மற்றும் நகலுடன் சென்றால் சிம்கார்டுகளும் வாங்கமுடியும். இந்த ஆண்டு பிஎஸ்என்எல் 3ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் 16 எம்.பி., வேகம் வரை பிரவுசிங்குக்கு கிடைக்கிறது. 50க்கும் மேற்பட்ட பிராட்பேன்ட் இணைப்புகளும், பத்து லீஸ் லைன்களும் கொடுக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவித்தனர்.