உடுமலை :சத்யசாய்பாபா கோவிலில், சாய்பாபா பிறந்தநாளையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நவ 23 நடக்கிறது. சாய்பாபாவின் 88 வது பிறந்தநாளையொட்டி, உடுமலை சாய்ராம் லேஅவுட்டிலுள்ள சத்யசாய்பாபா கோவிலில், 23ம் தேதி காலை 5.25 நகர சங்கீர்த்தன நிகழ்ச்சியும், தொடர்ந்து ஓம்கார சுப்ரபாதமும் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, கோவில் முன்பு கொடியேற்று விழாவும், நாராயணசேவை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு, சிறப்பு சொற்பொழிவு, சாய் பஜன், சிறப்பு பூஜை, ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை சத்யசாய் பக்தர்கள் செய்து வருகின்றனர்.