விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள கோவில் சுவரில், பொது தொலைபேசி எண்களை எழுதி வைத்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. இக் கோவிலின் சுற்றுச் சுவரில் பொது மக்களுக்கு பயனுள்ள பொது தொலைபேசி எண்களை எழுதியுள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலகம், அவசர ஆம்புலன்ஸ் சேவை, மின்சாரத்துறை அதிகாரி, மின்துறை பணியாளர், ஊராட்சித் தலைவர் ஆகியோரது தொலைபேசி மற்றும் மொபைல் எண்களை எழுதி வைத்துள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொலைபேசி எண்களை தேட வேண்டியதில்லை. இது போன்று பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை கோவில்களில் எழுதி வைத்துள்ள செயல் பாராட்டுக்கு உரியது.