பதிவு செய்த நாள்
25
நவ
2013
12:11
சபரிமலை: சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால், தமிழகத்தில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய நகரங்களில் இருந்து, பம்பை மற்றும் குமுளிக்கு தினமும், 40 சிறப்பு பஸ்களை இயக்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவும் துவங்கிவிட்டது.
இதுதொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கடலூர், திருச்சி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து, பம்பை செல்வதற்கு, தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல், சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், சேலம், கோயமுத்தூர் ஆகிய இடங்களில் இருந்து, குமுளிக்கு, ஜனவரி, 20ம் தேதி வரை, தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்க, தேவையான நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளது.சிறப்பு பஸ்கள் இயக்கத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், திருவான்மியூர், பாரிமுனை, பெங்களூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களிலும், டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.