திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவிலில் மகாசங்காபிஷேகம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரிஸ்வரர் கோவில் இந்துஅறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமயகுரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்கள் அன்று சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று 12 மணிக்கு சங்குகளில் புனிதநீர் நிரப்பி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது. சோழர் காலத்தில் எடுக்கப்பட்ட வலம்புரி சங்கும் பூஜையில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு 3.00 மணிக்கு 1008 சங்குகளிலும் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் வேதகிரிஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிடரிகள் செய்திருந்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.