மதுரை : மதுரையில், நேற்று இரவு, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, மீனாட்சி அம்மன் கோவில், கிழக்கு ராஜகோபுரம் மீது, மின்னல் தாக்கியதில் சுதைகளுடன், கோபுர முதல் கலசமும் சேதமுற்றது; 39 கண்காணிப்பு கேமராக்களும் செயலிழந்தன. கோவில், தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், சேதமுற்ற கோபுரத்தை இன்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, சுதைகளை செப்பனிடும் பணி கோவில், "ஸ்தபதி ரவி தலைமையில், உடன் துவங்கியது.